24 வயதில் இளம் செய்தி வாசிப்பாளர், நடிகை பிரியா வதனா தற்கொலை... வைரலாகும் கடைசி இன்ஸ்டா பதிவுகள்!
பிரபல செய்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்த இளம் பெண் பிரியா வதனா தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஊடக மற்றும் பத்திரிகைத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 24 வயதேயான பிரியா வதனா, செய்தி வாசிப்பாளராகத் தனது திறமையை வெளிப்படுத்தியதுடன், ஊடகத்துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
செய்தி வாசிப்புடன் நில்லாமல் திரைத்துறையிலும் தனது பயணத்தைச் சமீபத்தில்தான் அவர் தொடங்கினார். நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்தில் அவர் ஒரு சிறிய காட்சியிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் தான் தனது 24-வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரியா வதனா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக வெளியிட்ட பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, கோவையில் முதல்வர் விஜய் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்த நிகழ்வைப் பாராட்டி அவர் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உற்சாகமாக இயங்கியுள்ளார்.

எப்பொழுதும் துடிப்புடனும் உற்சாகத்துடனும் காணப்பட்ட பிரியா வதனா திடீரென இத்தகைய விபரீத முடிவை எடுக்கக் காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அவரது அகால மரணம் சக ஊடகவியலாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
