பெங்களூரில் லாட்ஜில் இளம்பெண் குத்திக்கொலை... காதலன் பரபரப்பு வாக்குமூலம்!

 
கேரளா

பெங்களூருவில் உள்ள லாட்ஜ் ஒன்றில், கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனே இளம்பெண்ணைக் கத்தியால் குத்திக் கொன்றது தெரிய வந்துள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் அடூரை சேர்ந்த 22 வயது கங்கா மற்றும் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது கோகுல கிருஷ்ணா ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

செவிலியர் படிப்பு முடித்து வேலை தேடி வந்த கங்காவை, வேலை தேடும் நோக்கில் கோகுல கிருஷ்ணா கேரளத்தில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்து வந்து காட்டன்பேட்டை பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார். இருவரும் அறையில் தங்கியிருந்த நிலையில், இருவருக்கும் இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Bengaluru lodge murder: Kerala woman stabbed to death at lodge by boyfriend after 4-year relationship, accused held | Bengaluru News - The Times of India

இதில் ஆத்திரமடைந்த கோகுல கிருஷ்ணா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கங்காவை சரமாரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

கங்கா வேறொரு வாலிபரைக் காதலித்து வருவதாக எழுந்த சந்தேகத்தில் இந்தக் கொலை நடந்ததாக கோகுல கிருஷ்ணாவிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காட்டன்பேட்டை போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து கோகுல கிருஷ்ணாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.