நீங்க எச்சில் துப்புறீங்க.. கொந்தளித்த பிரதீப் ஆண்டனி.. வெறுப்பான பவா செல்லதுரை..!

 
பிரதீப் ஆண்டனி
பவா செல்லத்துரை எச்சில் துப்புவதாக   பிரதீப் ஆண்டனி குற்றம் சாட்டியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவரான பவா செல்லதுரை எச்சில் துப்புவதாக  பிரதீப் ஆண்டனி பிரச்சினையை குற்றம் சாட்டியுள்ளார். இன்று போட்டியாளர்கள் அனைவரையும் உட்கார வைத்துக் கொண்டு பவா செல்லதுரையிடம் பிரதீப் பேச தொடங்குகிறார். அதாவது, "இந்த பிழையை பற்றி பேசுவது முன்பாக நான் தனிப்பட்ட முறையில் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். நான் உங்களை ஒரு குரு மாதிரி தான் பார்க்கிறேன். உங்களின் செயல்பாடுகளை நான் ஏற்றுக்கொள்வதைப் போல மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்களா என தெரியவில்லை.

இப்ப நீங்க சில இடங்களில் எச்சில் துப்புகிறீர்கள், நகம் கடித்து போடுகிறீர்கள். இதை காரணம் காட்டி உங்களை வீட்டை விட்டு அனுப்பி விட்டால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு மேடை. நீங்கள் எச்சில் துப்பும் போது நான் தான் அதை கை வைத்து அள்ளுகிறேன். நான் உங்களை காப்பாற்ற வரவில்லை. ஜெயிக்க வந்துள்ளேன். நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என பிரதீப் ஆண்டனி சொல்கிறார்.

Bigg Boss Tamil season 7 : அடுத்த அசீமா இருப்பாரோ... சண்டைக்கோழியாக மாறிய  பிரதீப் - பிக்பாஸ் வீட்டில் வெடித்த மோதல்.. வீடியோ இதோ

இதைக்கேட்டு பேசும் பவா செல்லத்துரை, “ என்னுடைய இயல்பை எதற்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன். பிக்பாஸ், கடவுள் என யார் கேட்டாலும் மாற மாட்டேன். நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர காரணம், வெளியே எனக்கு பெரிய எழுத்தாளர், கதை சொல்பவர், எல்லோரிடத்திலும் வயது வித்தியாசம் இல்லாமல் பழகுபவன் என்று ஒரு பெயர் இருக்கு. தமிழ்நாட்டில் உங்கள் வயதில் எனக்கு 1000 ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் நான் பிரியமானவன். இந்நிகழ்ச்சிக்கு மூலமாக என்னுடைய நெகட்டிவ் பக்கம் வெளியே வந்தால் சந்தோசப்படும் முதல் ஆள் நான் தான் என பதில் தெரிவிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு வீடியோவில் நிக்ஸன் மற்றும் விஜய் வர்மாவிடம் பேசும் சுசித்ரா, “ நீங்க ரெண்டு பேரும் எனக்கு மகன்கள் மாதிரி. பவா செல்லதுரை ஒரு கதை ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கும்போது நடுவில் வந்து பிரதீப் ஆண்டனி எச்சில் துப்பிய பிரச்சினையை இழுத்து பேசுகிறார். அவன் ஒரு நல்ல பையனா இருந்தா பவாவை தனியா கூப்பிட்டு சென்று, இதனைப் பற்றி சொல்லியிருக்கலாம். இத்தனைப் பேர் சுற்றியிருக்கும்போது சொல்லலாமா?. இது எல்லாமே பிரதீப் ஆண்டனியின் பிளான். எதை எங்கே சொல்ல வேண்டும் என்ற ஒன்று இருக்கிறது” என சொல்கிறார்.

இன்னொரு வீடியோவில் பிரதீப்பிடம் பேசும் ஐஷூ, “நீங்க சொல்லி தான் எச்சில் துப்புன விஷயமே எங்களுக்கு தெரியுது. நாங்க இனிமேல் தான் கவனிக்கவே செய்வோம். பவா செல்லதுரையை தனியாக கூப்பிட்டு சொல்லியிருக்கலாம்” என அட்வைஸ் செய்கிறார். ஆக மொத்தம் எச்சில் துப்புதல் பிரச்சினை இந்த வாரத்தில் கமலிடம் விவாதத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web