வாட்ஸ் அப்பில் நிர்வாண புகைப்படங்கள் வெளியிட்டதால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை!!

 
ராஜேஷ்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஏரி வேலூர் கிராமத்தில் வசித்து வருபவர்  ஸ்டாலின். இவரது மகன் 27 வயது ராஜேஷ் . இவர்  தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.  இவர்   மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார்.  தான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் அவர் திருப்பி செலுத்தி விட்டதாக கூறியுள்ளார்.  

விஷம்

இந்நிலையில் ராஜேஷுக்கு கடன் கொடுத்த ஆன்லைன் நிதிநிறுவனம் மேலும் கடன் தொகை பாக்கி இருப்பதாக அறிவித்துள்ளது.  அவரது மொபைலில் இருந்த  புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில்  வெளியிட்டு விடுவதாக ராஜேசுக்கு தொடர் மிரட்டல் விடுக்கப்பட்டது.  இதனால் மன வேதனை அடைந்த ராஜேஷ்  இரவு வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்து விட்டார்.  

ஆம்புலன்ஸ்

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  ராஜேஷ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இது குறித்து  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!