சட்டவிரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு - சிவகங்கை அருகே துயரம்!
சிவகங்கை மாவட்டம் தூதை கிராமத்தில் கரும்புத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை அருகே உள்ள தூதை கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்திற்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதைத் தடுப்பதற்காக, தோட்டைச் சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்ருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதி வழியாகச் சென்ற இளைஞர் ஒருவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை அறியாமல் தொட்டதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக (Autopsy) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த தோட்டத்தின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
