மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே சடலமாக கிடந்த இளைஞர்.. போலீசார் தீவிர விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டம், சாணசந்திரம், வஉசி நகர் பகுதியில் வசிப்பவர் மனோகர் (29). எலக்ட்ரீஷியனாக வேலை செய்யும் இவர், சூளகிரி அருகே உள்ள கோபசந்திரம் பகுதியில் தனது நண்பர்கள் ஹரிஷ், முனிராஜ் மற்றும் குமார் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, முனிராஜ் மற்றும் குமார் வீட்டிற்குச் சென்ற பிறகு, மனோகரும் ஹரிஷும் இருசக்கர வாகனத்தில் கசவகட்டா பகுதிக்குச் சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சில மணி நேரம் கழித்து, கசவகட்டா பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே உள்ள புதர்களில் தலையில் வெட்டுக்களுடன் ஒரு இளைஞர் உயிருக்குப் போராடி வருவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அந்த இளைஞர் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் சாணசந்திரம் பகுதியைச் சேர்ந்த மனோகர் என்பது தெரியவந்தது.
போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து, கொலையாளியைத் தேடி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!