டாஸ்மாக் முன் இளைஞர் வெட்டிக்கொலை... நெல்லையில் பயங்கரம்!

 
குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
 

 

நெல்லையில் டாஸ்மாக் கடை முன் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழச்செவல் நயினார்குளத்தைச் சேர்ந்தவர் முப்புடாதி. இவருடைய மகன் மணிகண்டன் (29). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

நேற்று காலையில் மணிகண்டன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் நெல்லை மேலப்பாளையம் அருகே மேல கருங்குளம் டாஸ்மாக் கடை அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மர்மகும்பல் திடீரென்று மணிகண்டனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த டாஸ்மாக் கடை முன் நடந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் விஜயகுமார், உதவி போலீஸ் கமிஷனர் சரவணன், மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐ கிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச போலீஸ்

கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதாக கூறப்பட்டதை தொடர்ந்து நெல்லை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். நெல்லை டாஸ்மாக் கடை முன் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!