இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரட்டை மகிழ்ச்சி… அரையிறுதிக்கு முன்னேறிய அம்பேகர், குஞ்சன்!
செனகலின் டக்கார் நகரில் நடைபெற்று வரும் 2026 இளையோர் ஒலிம்பிக் போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீரர்கள் அம்பேகர் மீதேய் லைரென்லக்பம் மற்றும் குஞ்சன் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி நாட்டுக்கு இரண்டு பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில், இந்திய வீரர் அம்பேகர் மீதேய், நமீபியாவின் ஆபிரகாம் கலெங்காவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அம்பேகர், முதல் சுற்றிலேயே நடுவரால் போட்டி நிறுத்தப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஒரு நிமிடம் 57 விநாடிகளில் இந்தப் போட்டி முடிவுக்கு வந்தது.
பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை குஞ்சன், மெக்சிகோவின் அட்டேனா சோபியா ஜுவாரெஸ் கலேரோவை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறும் வீரர்களுக்கு குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் உறுதி என்பதால், இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இருவரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கப் பதக்கத்தை வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
