அட.. டாடா நிறுவனத்திடம் ரூ50 கோடி பணம் வாங்க மறுத்த இளைஞர்!!

 
மோஹித்

இந்தியாவில் சாலைவிபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன . இதில் பெரும்பாலான விபத்துக்கள் மது போதையில் வாகனத்தை ஓட்டுவதும், சாலை விதிகளை மதிக்காமல் இருப்பதும் தான் என்கின்றன புள்ளி விபரங்கள்.  இந்நிலையில் ஹரியானாவை சேர்ந்த  23 வயதான மோஹித் யாதவ்  விபத்துகளை தவிர்க்கக் கூடிய ஓர் மென்பொருளை உருவாக்கியுள்ளார்.தன்னுடைய சிறு வயதில் கண்ணெதிரில் மோதிய  கார் மற்றும் டிரக் விபத்தை நேரில் பார்த்துள்ளார். அப்போது முதல் இத்தகையை விபத்துக்களை தடுக்க வேண்டும் என  அவரது சிந்தனையில் ஓடிக்கொண்டே இருந்தது. இந்த செயலி விபத்தை தவிர்ப்பது மட்டுமின்றி எரிபொருள் சிக்கனத்திற்கும் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

டிசிஎஸ் டாடா

இதனால்  சுமார் 50 சதவீதம் வரை எரிபொருளை சிக்கனப்படுத்தலாம்.   இந்த செயலியை  மோஹித்திடம் இருந்து  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விலை கொடுத்து வாங்க முன் வந்திருக்கின்றது. இதற்காக சுமார்  ரூ50 கோடி   வரை அவருக்கு வழங்க டாடா மோட்டார்ஸ் தயாராக உள்ளது. ஆனால் மோஹித்  மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர் அந்த பணத்தை ஏற்க மறுத்து  இந்த மென்பொருளை அரசாங்கத்திடம் வழங்கப் போவதாக  கூறி இருக்கின்றார்.

மோஹித்
ஹரியானா மாநிலம் பிவானி பகுதியில் வசித்து வருபவர்  மோஹித் யாதவ். இவர் , சண்டிகர் பல்கலைகழகத்தில் பிடெக் பட்டம் முடித்தவர்.  இந்தப் படிப்பின் இறுதியாண்டின் போதே, விபத்தை தவிர்க்கும் மற்றும் மைலேஜை அதிகரிக்கும் இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளார்.   இந்த மென்பொருள் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதையும் தவிர்க்க உதவி செய்யும். வாகனத்தில் இந்த   சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்துவிட்டால்   வாகன ஓட்டுநர் குடித்திருந்தால் வாகனம் ஸ்டார்ட் ஆகாது.இத்தகைய சூப்பரான மென்பொருளையே மோஹித் யாதவ் உருவாக்கி இருக்கிறார். இந்த மென்பொருள் டீசல் மற்றும் பெட்ரோல் என இரு வாகனங்களின் மைலேஜ் திறனையும் அதிகரிக்கச் செய்யும். இதனை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் இந்த மாணவர் மேற்கொண்டு வருகிறார். இதற்குவாகன ஓட்டிகள்  மத்தியில்   நல்ல வரவேற்புக் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, இந்த தொழில்நுட்பம் விரைவில் வாகனங்களில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web