அதிர்ச்சி வீடியோ... லைக்குகளுக்காக உதட்டில் GUM ஒட்டிய இளைஞர்.. வாயை திறக்கவும் முடியல, சாப்பிடவும் முடியல!

 
gum


சமூக வலைதளங்களில் லைக்குகள், ஷேர்களை அள்ள வேண்டும் என்பதற்காக பலரும் ஆபத்தான ரிஸ்க்குகளை எடுக்கின்றனர். சிலர் குறுகிய காலத்தில் பிரபலமாக வேண்டி வீபரிதமான தேவையற்ற செயல்களை செய்து வருகின்றனர் அதன்பிறகு ஆபத்தில் சிக்கி கொண்டு அவதிப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது.  அந்த வகையில்  இணையதளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக  இளைஞர் ஒருவர்  தன்னுடைய உதட்டில் ஒரு GUM போட்டு ஒட்டுகிறார். அதாவது Superglue என்ற கம்மை வைத்து அந்த வாலிபர் சாகசம் செய்ய நினைத்து தற்போது வாயை கூட திறக்க முடியாமல் பேச முடியாமல் சாப்பிட முடியாமல் பரிதவித்து வருகிறார்.

அந்த கம்மை முதலில் அவர் உதட்டில்  ஒட்டி விட்டு ஹாயாக சிரித்துக்கொண்டே பின்னர் வாயை திறக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் வாயை திறக்கவும் முடியவில்லை, பேசவும் முடியவில்லை.  இதன் காரணமாக அவர் கண்கலங்கி நிற்பது பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. இது போன்ற விபரீதமான செயல்களில் ஈடுபடாதீர்கள் என நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web