எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க!! செல்போன் டவர் மேல் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்!!

 
செல்போன் டவர்

திருச்சி அருகே  மணிகண்டம்  நாராயணபுரத்தில் வசித்து வரும்   கட்டடத் தொழிலாளி செ. தினேஷ் . இவருக்கு வயது 22. இவா், அதே பகுதியில் வசித்துவரும்  17 வயது சிறுமியை காதலித்து வந்தார்.  ஜூலை17 ம் தேதி அந்த சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயற்சித்தபோது  சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில்  சிறுமியை மீட்ட போலீசார்  போக்சோவில்  தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.சிறையிலிருந்து  வெளியே வந்த அவர், தான்  காதலித்த பெண்ணுடன்  தொடர்பு கொண்டார்.

செல்போன் டவர்

இருவரும் காதலில் உறுதியாக இருக்கவே இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர்  முடிவு செய்தனர். ஆனால் திடீரென   இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்.  இதனால் மனமுடைந்த தினேஷ், நேற்று  நாகமங்கலம் பகுதியிலுள்ள செல்போன் டவர் மீது ஏறிக்கொண்டார்.  உச்சிக்குச் சென்று அங்கிருந்து  காதலித்த பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லாவிட்டால் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்   தினேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீஸ்

அத்துடன்  அந்த பெண்ணின் பெற்றோர் ஆகியோரையும் வரவழைத்து  அவர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டது. இறுதியில்  அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைப்பதாக இருவீட்டாரும் உறுதி அளித்த பிறகு  தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தினேஷ் கீழே இறங்கி வந்தார். தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் வெயிலில்  நின்றதால்  தினேஷ் கீழே இறங்கியதும்  மயக்க நிலைக்குச் சென்றார். ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு  அனுமதிக்கப்பட்டு  அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web