யூடியூபர் மதுமிதா மீது 5 சவரன் நகை திருட்டு வழக்குப்பதிவு!

 
நாகர்கோவில் இன்ஸ்டா யூ-ட்யூபர் மதுமிதா

நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதா மீது, பேச்சிமுத்து என்பவரிடம் இருந்து 5 சவரன் நகையைத் திருடியதாக ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுமிதா

நாகர்கோவிலைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு பிசியோதெரபி சிகிச்சைக்குச் சென்றபோது யூடியூபர் மதுமிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காரில் இணைந்து பயணித்துள்ளனர். அப்போது பேச்சிமுத்துவுக்குத் தெரியாமல் அவரது 5 சவரன் நகையை மதுமிதா திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மதுமிதா

இது குறித்து வெளியில் கூறினால் தீவிர விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மதுமிதா மிரட்டியதால், பயந்துபோய் அப்போது புகார் அளிக்கவில்லை எனப் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார். தற்போது துணிச்சலாக அளித்த புகாரின்பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் யூடியூபர் மதுமிதா மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.