கேரளாவில் பரபரப்பு - கார் ஓட்டுநருடன் தப்பியோடிய பிரபல யூடியூபரின் மனைவி!
கேரளாவைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பிரபலத்தின் மனைவி, வீட்டின் கார் ஓட்டுநருடன் ரொக்கப் பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் அதிகப் பின்தொடர்பாளர்களைக் கொண்ட யூடியூபரான அகில் என்.ஆர்.டி என்பவரின் மனைவி மேகா, குடும்பத்துடன் பணியாற்றி வந்த கார் ஓட்டுநருடன் தப்பியோடியுள்ளார். இரவில் மேகா இரவு உடையில் கையில் இரண்டு பெரிய சூட்கேஸ்களை ஏந்தியபடி வீட்டை விட்டு வெளியேறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேகா வீட்டை விட்டுச் செல்லும்போது வீட்டிலிருந்த பெரும்தொகையான ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய மேகாவும் அந்த கார் ஓட்டுநரும் உடனடியாகத் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
