சிக்கியது ஜாபர் சாதிக்கின் 7 செல்போன்கள்.. பல முக்கிய தகவல்களை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள்!

 
ஜாபர்

திமுக முன்னாள் அயலக் குழு உறுப்பினர் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்  ஜாபர் சாதிக் டெல்லியில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.  மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், முதலில் 7 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டார்.

ஜாபர் சாதிக்

இந்த விசாரணை நேற்று நிறைவடைந்த நிலையில், ஜாபர் சாதிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் இ-மெயில் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறிய அதிகாரிகள் மேலும் 3 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கேட்டனர்.

இதன்படி ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் அவர் 7 செல்போன்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போன்களில் இருந்து பல்வேறு தகவல்களை இ-மெயில் மூலம் வெளியாட்களுக்கு ஜாபர் சாதிக் அனுப்பியுள்ளார்.இது தொடர்பான தகவல்களை செல்போன் மூலம் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் ஜாபர் சாதிக்குடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிய டெல்லி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஜாபர் சாதிக் வாட்ஸ்அப் மூலம் யாருக்கு என்னென்ன தகவல்களை அனுப்பியுள்ளார் என்ற விவரங்களும் செல்போன்களில் இருந்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் செல்போன் தரவு சேகரிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜாபர் சாதிக்கின் காவல் முடிந்ததும் மேலும் பலர் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web