ZOHO நிறுவனம்.. தலைமை நிர்வாக அதிகாரியின் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்ரீதர் வேம்பு!

 
 ஸ்ரீதர் வேம்பு

ZOHO மென்பொருள் நிறுவனம், அதன் தலைமை செயல் அலுவலர் பதவியை ராஜினாமா செய்த ஸ்ரீதர் வேம்புவுக்குப் பதிலாக ஷைலேஷ் குமார் நியமிக்கப்பட்டடுள்ளார். ஸ்ரீதர் வேம்பு தனது வலைத்தளத்தில் ஒரு பதிவில், “இன்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. செயற்கை நுண்ணறிவின் வளர்ந்து வரும் பங்கு உட்பட, நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டிய நேரம் இது என்று முடிவு செய்துள்ளேன்.


இதைக் கருத்தில் கொண்டு, ZOHO கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியில் இருந்து விலகுகிறேன். நான் தலைமை  விஞ்ஞானி என்ற பதவியை ஏற்றுக்கொள்கிறேன். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எனது முழு கவனத்தையும் செலுத்துவேன். எனது புதிய பணியை ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் அணுகுவேன். தொழில்நுட்பத் துறையில் மீண்டும் வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

சென்னையில் தலைமையகம் வைத்து, உலகளவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் ZOHO, ஸ்ரீதர் வேம்புவால் நிறுவப்பட்ட ஒரு முன்னணி மென்பொருள் சேவை வழங்குநராகும். இந்த நிறுவனம் வணிக மென்பொருள் சந்தையில் மைக்ரோசாப்ட், கூகிள், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் ஆரக்கிள் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. ZOHO அதன் 55+ வணிக பயன்பாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. இது 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் 7,00,000 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.

1989 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, ஸ்ரீதர் வேம்பு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.2005 ஆம் ஆண்டு ZOHO நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்பு, அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள குவால்காமில் பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் 39 வது பணக்காரராக ஸ்ரீதர் வேம்புவை மதிப்பிட்டது. அவரது நிகர மதிப்பு $5.85 பில்லியன்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web