இன்று அசாமில் பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம் - ரோடு ஷோவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்.. பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார்!

 
மோடி ரோடு ஷோ மோடி ரோடு ஷோ

அசாம் மாநிலத்தின் 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி மூன்று முக்கியத் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இன்று முதற்கட்ட பிரச்சாரத்தைத் துவங்குகிறார். இன்று ஏப்ரல் 1ம் தேதி முதற்கட்ட பிரசாரக் கூட்டம், ஏப்ரல் 3ம் தேதி இரண்டாம் கட்ட பிரசாரக் கூட்டம் மற்றும் ஏப்ரல் 6ம் தேதி இறுதிக்கட்டப் பிரசாரக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மூன்று நாட்களில் அசாமின் பல்வேறு மண்டலங்களில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

மோடி

அசாம் மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது. தற்போது வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 23ம் தேதி மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது ஆட்சியில் உள்ள முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாக உள்ளது. மறுபுறம், கௌரவ் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி மற்றும் ஏ.ஐ.யு.டி.எஃப் ஆகிய கட்சிகள் பாஜகவிற்கு கடும் சவாலை அளித்து வருகின்றன.

பிரதமர் மோடி

பிரதமர் மோடியைத் தவிர்த்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அசாமில் பல இடங்களில் தேர்தல் பிரசாரம் மற்றும் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.