தூத்துக்குடியில் அதிமுக செயலாளருக்கு சரமாரி வெட்டு... பொதுமக்கள் போரட்டம்!
தூத்துக்குடியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “தூத்துக்குடி பி அன் டி காலனியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் ஜோதி மகன் தனராஜ் (40). இவர் 36வது வார்டு முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஆவார். மேலும் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை தூத்துக்குடி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் நேற்றிரவு தனது வீட்டு முன்பு தனது உறவினரான ஆல்வின் ஜோயல் மற்றும் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த பேச்சிமுத்து மகன் சித்திரை பிச்சமுத்து (28) என்பவர் ரோட்டில் உடைத்து கிடைந்த தடியங்காயால் வழக்கி விழுந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி விட வரும்போது ரோட்டில் தடியங்காய் உடைத்து என்னை கீழே விழ வைத்தது நீங்கள் தானே என்று கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் ஆல்வின் ஜோயல் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தினாராம்.

இதனால் ஆத்திரமடைந்த தனராஜ், சித்திரை பிச்சமுத்துவை தாக்கினாராம். இதையடுத்து சித்திரை பிச்சமுத்து தான் வைத்திருந்த அரிவாளால் தனராஜை சரமாரியாக வெட்டினராம். இதில் அவரது வலது கை மற்றும் வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப் பதிந்து, சித்திரை பிச்சமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
