“ஓட்டுக்கு பணம் வாங்கறீங்களா?... உங்கள் விலை ஒரு பன்றியை விடக் குறைவா?” - நாம் தமிழர் கட்சியின் வைரலாகும் விலைப் பட்டியல் பேனர்!

 
நாம் தமிழர் நாம் தமிழர்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி திருவாடானை தொகுதியில் வைத்துள்ள நூதன விழிப்புணர்வுப் பேனர் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் ஒருபுறம் போராடி வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள ஒரு ‘விலைப் பட்டியல்’ பொதுமக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குப்பதிவு வாக்கு பீகார் தேர்தல்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட புதுப்பட்டிணம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஒரு விழிப்புணர்வுப் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் விலங்குகள் மற்றும் மனிதர்களின் ‘சந்தை மதிப்பு’ ஒப்பிடப்பட்டுள்ளது.

எருமை மாடு: ரூ. 55,000, பசு மாடு: ரூ. 45,000, ஆடு: ரூ. 10,000, நாய்: ரூ. 5,000 முதல் ரூ. 25,000 வரை, பன்றி: ரூ. 5,000 முதல் ரூ. 15,000 வரை. மக்களின் விலை எவ்வளவு? அதே பேனரில், தேர்தலில் வாக்காளர்களின் நிலை குறித்துக் கடுமையான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன:

"தேர்தலில் மக்களின் விலை ரூ. 500 முதல் ரூ. 2,000 வரை மட்டுமே. இது ஒரு பன்றியின் விலையை விடக் குறைவு. இதைச் சிந்தித்துப் பாருங்கள். பணம் பெறாமல் தன்மானத்துடன் வாக்களியுங்கள்."

பணம் ரொக்கம் சோதனை பறிமுதல்

வழக்கமான அரசியல் பிரசாரங்களைப் போலன்றி, மக்களின் தன்மானத்தைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாசகங்கள் அந்தப் பகுதி கடந்து செல்பவர்களை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கின்றன. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, "காசுக்கு ஓட்டுப் போடுவது நம் தலைமுறைக்கே செய்யும் துரோகம்" என்ற கருத்தை முன்வைத்து இத்தகைய தீவிர விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் பணப் பறிமுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், அரசியல் கட்சிகளே இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.