“நாளை நல்ல முடிவை அறிவிப்பேன்..” - ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சூளுரை!

 
சசிகலா

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சசிகலாவின் இந்த அறிவிப்பு அதிமுக மற்றும் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு இன்று சசிகலா நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாளை நடைபெறும் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும். நல்ல தகவலை உங்களுக்குச் சொல்கிறேன். நாளை பசும்பொன்னில் நடைபெற இருக்கும் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் எனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்டத்தை அறிவிப்பேன்" என்று கூறினார்.

உடைகிறதா அதிமுக?! சசிகலா மீது ஆர்பி உதயகுமார்  கடும் தாக்கு!

சசிகலா நாளை தனது சொந்த அரசியல் கட்சியைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் பெயர் மற்றும் கொடியை அவர் நாளை அறிமுகப்படுத்தலாம் எனத் தெரிகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவாளர்களைக் களம் இறக்கி, சுமார் 40 முதல் 50 தொகுதிகளில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை எதிர்த்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

சசிகலா

"துரோகிகளையும் எதிரிகளையும் வேரறுப்போம்" என அவர் ஏற்கனவே தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளைய அறிவிப்பு அதிமுகவின் வாக்கு வங்கியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.