தமிழக காவல் துறையில் 13 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்: அரசு வெளியிட்ட முழு விவரம்!
தமிழ்நாடு காவல்துறையில் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் முக்கியப் பிரிவுகளில் பணியாற்றி வந்த 13 ஐபிஎஸ் உயர் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ்: காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை மேற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார். (முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி-யாகப் பணியாற்றியவர்).
ஜோஷி நிர்மல் குமார் ஐபிஎஸ்: சேலம் மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றிய இவர், சென்னை காவல்துறை தலைமை அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.-யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
A.G. பாபு ஐபிஎஸ்: சென்னை மாநகரக் காவல் தலைமையிட கூடுதல் ஆணையராக இருந்த இவர், சேலம் மாநகர காவல் ஆணையராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
சந்தோஷ் ஹடிமணி ஐபிஎஸ்: சேலம் சரக டி.ஐ.ஜி.-யாக இருந்த இவர், சென்னை காவல் உளவுப் பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

N. தேவராணி ஐபிஎஸ்: லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஐ.ஜி.-யாகப் பணியாற்றிய இவர், சேலம் சரக டி.ஐ.ஜி.-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
V. பத்ரி நாராயணன் ஐபிஎஸ்: கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.-யாக இருந்த இவர், சென்னை அடையாறு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
A.C. கார்த்திகேயன்: காத்திருப்புப் பட்டியலில் இருந்த இவர், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
N. மதிவானன்: சென்னை போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத்துறை (NIB CID) எஸ்.பி.-யாக இருந்த இவர், சென்னை பரங்கிமலை துணை ஆணையராகப் பொறுப்பேற்க உள்ளார்.
V.R. ஸ்ரீனிவாசன் ஐபிஎஸ்: சென்னை பரங்கிமலை துணை ஆணையராகப் பணியாற்றிய இவர், சென்னை NIB CID எஸ்.பி.-யாக மாற்றப்பட்டுள்ளார்.

K. ஸ்டாலின்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி.-யாக இருந்த இவர், சிபிசிஐடி தென் மண்டல எஸ்.பி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
P. சுந்தரவடிவேல் ஐபிஎஸ்: சென்னை மாநகர பாதுகாப்பு துணை ஆணையராகப் பணியாற்றிய இவர், சென்னை மாநகர காவலர் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Dr. V. பாஸ்கரன் ஐபிஎஸ்: சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த இவர், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அங்கித் சிங் ஐபிஎஸ்: சேலம் வடக்கு துணை ஆணையராகப் பணியாற்றிய இவர், சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
