2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

 
2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகின்றன. மாநிலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கேற்ப மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

கொரோனா தாக்கம் முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளது. பல்வேறு மாநிலங்கள் பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. டெல்லியில் ஒரு வார முழு ஊரடங்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 15 நாள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதே போல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் “வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளார். முழு ஊரடங்கு இல்லாத நாட்களில் பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் செயல்பட வேண்டும். அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்லது. பகல் 2 மணிக்கு பின் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web