அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்த ஜி.கே.வாசன்.. முட்டுக்கொடுப்பாரா ஓபிஎஸ் !!

 
வாசன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா, கடந்த 4ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை உடனடியாக அமலுக்கு வந்தது.

அதேநேரம், தொகுதியில் யார் போட்டியிடுவது என அரசியல் கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் த.மா.கா போட்டியிட்டது. ஆனால் இந்தமுறை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட பழனிசாமி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. அதிமுக தற்போது இரு அணிகளாக பிரிந்து நீதிமன்றத்தில் நிற்பதால் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற சந்தேகம் அதிமுகவினருக்கு எழுந்துள்ளது.

க

இந்தநிலையில், ஜி.கே.வாசனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன்முடிவில், இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அதிமுக விருப்பத்தை ஏற்றுகொள்வதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலை அறிவித்துள்ளார். 
தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு அதிமுகவினர் முடிவை ஏற்கிறோம் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.

மக்கள் நலன், கூட்டணிக் கட்சிகளின் நலனை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கு தமாகாவினர் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2021-ல் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த யுவராஜா போட்டியிட்டிருந்தார். அதிமுக போட்டியிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் அறிவித்த நிலையில் பாஜக இன்று ஆலோசனை நடத்துகிறது.

From around the web