இன்று அதிமுக செயற்குழு கூட்டம்! கொறடா பதவி யாருக்கு?

 
இன்று அதிமுக செயற்குழு கூட்டம்! கொறடா பதவி யாருக்கு?


தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. எதிர்கட்சியாக அதிமுக உள்ளது . இந்நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று ஜுன் 14ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிமுக செயற்குழு கூட்டம்! கொறடா பதவி யாருக்கு?

கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற துணைத் தலைவர், கொறடா பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இந்த பதவிக்கு போட்டியிடுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிமுக செயற்குழு கூட்டம்! கொறடா பதவி யாருக்கு?

கொறடா பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியனும், துணைத் தலைவர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன், வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன் உட்பட மற்ற சில மூத்த தலைவர்களும் முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி பலமாக உள்ளதால் யாருக்கு பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இந்த கூட்டத்திற்கு எம் எல் ஏக்கள் அனைவரும் அடையாள அட்டையுடன் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web