“விஜய் மாநாட்டுக்கு இடம் தந்தால் மடத்தை பிடிப்பார் என்பதால் திமுக அஞ்சுகிறது” - தமிழிசை
“திமுக, நடிகர் விஜய் மாநாடு நடத்துவதற்காக இடம் கொடுத்தால் மடத்தைப் பிடித்து விடுவார் என்று நடிகர் விஜய்யை பார்த்து அஞ்சுகிறது” என்று பாஜக தமிழிசை சவுந்தரராஜன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்தித்தேன். முன்னாள் ஆளுநர் என்ற அடிப்படையில் சில கருத்துகளை அவரிடம் பரிமாறிக் கொண்டேன். அமெரிக்கா சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், அங்கு புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது, சைக்கிள் ஓட்டுவதையே பணியாக கொண்டிருக்கிறாரே தவிர, பெரிதாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதாக தெரியவில்லை.
கார் பந்தயத்தைக்கூட திமுக அரசால் சுலபமாக நடத்த முடிகிறது. ஆனால், மாநாடு நடத்தவிட முடியாமல் விஜய் கட்சியை திமுக அரசு முடக்குகிறது. மாநாடு நடத்த இடம் கொடுப்பதில் திமுக அரசுக்கு என்ன பிரச்சினை? நடிகர் விஜய் பாவம். ஒவ்வொரு முறையும் மாநாட்டுக்கான இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். விஜய் மேல் ஏன் திமுகவுக்கு அவ்வளவு பயம்? மாநாடு நடத்த இடத்தை கொடுத்தால், மடத்தை பிடித்து விடுவார் என திமுக பயப்படுகிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் எதிர்கட்சிகளை கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. அதனால், எதிர்கட்சிகளே இருக்கக்கூடாது, முடக்கிவிட வேண்டும் என திமுக நினைக்கிறது. டாஸ்மாக், காவிரி என எந்த பிரச்சினைக்கும் வாய் திறக்காமல், தமிழகத்தில் மிக மோசமான அரசு நடந்து கொண்டிருக்கிறது.அரசுப் பள்ளி மாணவர்கள் பிரெஞ்சு மொழி படிக்க வேண்டும் என்று தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுகிறது.
அரசியல் இன்னும் ஆண் சமுதாய ஆதிக்கமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. அரசியலில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதை எங்களை போன்றவர்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் தான் மற்றவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால் தான் ஸ்டாலின் என்னுடைய பாதுகாப்பையும், பிரேமலதா பாதுகாப்பையும் எடுத்துவிட்டார். ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. ஒரு டிஎஸ்பி தலைமுடியை பிடித்து இழுக்கிறார்கள் என்றால், அரசியலில் உள்ளவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க போகிறது?” என்று கூறினார்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா