வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! உள்துறை அமைச்சகம்!

 
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! உள்துறை அமைச்சகம்!


இந்தியாவில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பரவி வரும் கொரோனா காரணமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக , உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் படிப்படியாக சர்வதேச விமான சேவை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! உள்துறை அமைச்சகம்!

சில குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் மூலம் அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.தற்போது மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்தும் வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்க மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சுற்றுலா விசாவைத் தவிர, மற்ற வகை விசாக்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்தன. சுற்றுலா துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலாவை சார்ந்த ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவற்றின் வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! உள்துறை அமைச்சகம்!


அதன்படி, முதல்கட்டமாக, தனி விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15 முதல் தனி விமானத்தில் வரும் சுற்றுலா பயணிகளுக்கும், நவம்பர் 15 முதல் வழக்கமான விமானத்தில் வருபவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிதாக சுற்றுலா விசாவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், அழைத்து வரும் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web