இந்தியா – ரஷ்யா ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

 
இந்தியா – ரஷ்யா ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

ரஷ்யா அதிபர் புதின் இன்று இந்தியா வருவதை முன்னிட்டு ராணுவம் உள்ளிட்ட தொழில்துறை வளர்ச்சி தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதில் ஒரு பகுதியாக இந்தியா – ரஷ்யா இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா – ரஷ்யா ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

அந்த ஒப்பந்தத்தின் படி, இருநாட்டுக்கும் இடையேயான ராணுவ கூட்டுப்பயிற்சி திட்டங்கள் 2021 முதல் 2031 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு கூட்டுத் தயாரிப்பில் உத்திர பிரதேச மாநிலத்தில் தொழிற்சாலை அமைத்து ஏகே – 203 ரக தானியங்கி துப்பாக்கிகளை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பாதுக்காப்பு துறை அமைச்சர் செர்ஜெய் ஷொய்கு ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மேலும், ராணுவ தயாரிப்புகளான துப்பாக்கி, ஹெலிகாப்டர், ராணுவ தளவாடங்கள், எரிபொருள் எண்ணெய் தொடர்பில் மேலும் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web