ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று அஞ்சலி!

 
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று அஞ்சலி!

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று அஞ்சலி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுகவினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் இன்று காலை, ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பிறகு அவரது நினைவிடத்தில் வைத்து அதிமுகவினர் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி மொழியை வாசிக்க, கழக நிர்வாகிகள் அனைவரும் அதனை வழிமொழிந்து உச்சரித்தனர். இந்நிகழ்வில் அதிமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

From around the web