எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கொறடா தேர்வு

 
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கொறடா தேர்வு

தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எ.பி.எஸ், ஓபிஎஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கொறடா தேர்வு

கட்சி அலுவலகத்துக்கு வெளியே இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதமும் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே பலத்த போட்டி நிலவிய நிலையில், கூட்டம் முடிவில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரும் தேர்வு செய்யப்படாமல் அந்த கூட்டம் முடிவடைந்தது.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கொறடா தேர்வு

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே பலத்த போட்டி நிலவிய நிலையில், கூட்டம் முடிவில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரும் தேர்வு செய்யப்படாமல் அந்த கூட்டம் முடிவடைந்தது.

இந்தநிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டசபையின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கட்சியின் கொறடா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கொறடா தேர்வு

சட்டசபை எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், கொறடாவாகத் எஸ்.பி. வேலுமணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை கொறடா: க. ரவி (அரக்கோணம் எம்.எல்.ஏ)

பொருளாளர்: கடம்பூர் சி. ராஜூ

செயலாளர்: கே.பி. அன்பழகன்

துணைச் செயலாளர்: பி.எச். மனோஜ் பாண்டியன்

From around the web