சசிகலா ரிட்டர்ன்ஸ்! டிசம்பருக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல்! சங்கடத்தில் எடப்பாடி!

 
சசிகலா ரிட்டர்ன்ஸ்! டிசம்பருக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல்! சங்கடத்தில் எடப்பாடி!

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுகவின் சட்ட திட்டங்களின் படி அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் தற்போது அது போன்று அதிமுகவில் இல்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டிற்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்கவில்லை சர்வாதிகாரப் போக்குடன் கட்சியின் தலைமை நிர்வாகிகளை நியமித்து வருவதாகவும், இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கில் ஏன் அதிமுகவை எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

சசிகலா ரிட்டர்ன்ஸ்! டிசம்பருக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல்! சங்கடத்தில் எடப்பாடி!

இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், அதிமுகவின் உட்கட்சி தேர்தலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விடுவதாக அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அதிமுகவையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

ஆடிப் பெளர்ணமியன்று சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார்.

சசிகலா ரிட்டர்ன்ஸ்! டிசம்பருக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல்! சங்கடத்தில் எடப்பாடி!

தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு சசிகலாவை அதிமுக கண்டுக்கொள்ளாததே காரணம் என்று கூறப்படுகிறது. சசிகலாவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்திருந்தால், இன்னும் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அதிமுக தன் கையை விட்டு நழுவி செல்வதை எடப்பாடி எப்படி சமாளிக்கப்போகிறார் என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

From around the web