அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை

 
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை

இரன்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த சந்திப்புகளின்போது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் அடங்கிய ‘குவாட்’ அமைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, மின்னணு, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் ராணுவ துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web