வாக்குப்பதிவு துவங்கியது... டெல்லியில் கடும்பனியிலும் ஆர்வமுடன் குவிந்த வாக்காளர்கள்... 70 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல்!

இந்தியாவின் தலைநகர் டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 23ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது. டெல்லி கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு நீண்ட வரிசையில் நின்றனர். முதல் முறை வாக்களிக்கும் ஆர்வத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் குவிந்தனர்.
மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இதில் டெல்லியின் முதல்-மந்திரி அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் மோதுகின்றனர்.
இவர்கள் 2 பேரும் முன்னாள் முதல்-மந்திரிகளின் மகன்கள் ஆவர். சந்தீப் தீட்சித், டெல்லியில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக இருந்த ஷீலா தீட்சித்தின் மகன் ஆவார். இதைப்போல கல்காஜி தொகுதியில் அதிஷியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ரமேஷ் பிதூரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் நிற்கிறார்கள். ஆம் ஆத்மியின் செல்வாக்கு மிக்க தலைவர்களை எதிர்த்து பா.ஜனதாவும் வலுவாகவே போட்டியாளர்களை நிறுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6.30 மணிவரை நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ள நிலையில், இன்று டெல்லியில் தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது. மதுபானக்கடைகள் மூடியிருக்கும்.
மருத்துவமனை, மருந்தகம் போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கான நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக மக்களின் போக்குவரத்துக்கு பஸ் மற்றும் மெட்ரோ ரயில்கள் தங்கு தடையின்றி இயக்கப்படும். மெட்ரோ போக்குவரத்து அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!