முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்... ரூ40000/- கோடி ஐபிஓ வை வெளியிட தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ!

டிரம்ப்பின் வரி விதிப்பால் மார்க்கெட் நிலவரங்கள் மோசமாகி வருகின்றன. இப்படியான சூழலில் தான் நம் நாட்டின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனத்தின் ஐபிஓவை பங்குச் சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் தனிநபர்களுக்கு சூப்பர் ஆஃபர் கிடைக்க உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முண்ணனியில் இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உட்பட பல்வேறு தொழில்களை இவர் நிர்வகித்து வருகிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஒரு பகுதியாகவே ஜியோ நெட்வொர்க்கை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். ரிலையன்ஸ் ஜியோ என்பது தொலைதொடர்பு துறை சார்ந்த நிறுவனமாகும். இந்நிலையில் தான் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் ஐபிஓவை பங்கு சந்தையில் வெளியிட முடிவு செய்துள்ளார். இதனை முகேஷ் அம்பானிக்கு நெருக்கமானவர்கள் உறுதி செய்துள்ளனர்.
தற்போது மார்க்கெட் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். இதனால் மார்க்கெட் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. பங்கு சந்தை முதலீடு என்பது பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் பல நிறுவனங்களின் பங்குகள் என தொடர் சரிவை மேற்கொண்டு வருகின்றன. இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளனர். இப்படியான சூழலில் தான் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் ஐபிஓவை பங்கு சந்தையில் வெளியிட முடிவு செய்துள்ளார். இது பங்கு சந்தை முதலீட்டில் இருக்கும் தனிநபர்களுக்கு சூப்பர் ஆஃபராக அமையப்போகிறது.
முதலீட்டாளர்களுக்கு இது நல்ல எதிர்காலத்தை வழங்கும் என்பதை இதன் மூலம் உறுதி செய்யலாம். இதன் முதற்கட்டமாக ரூ. 35000 முதல் 40000 கோடி வரை நிதி திரட்டும் வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புதியவர்களை முதலீடு செய்ய இந்த திட்டம் அனுமதிக்க உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் ஐபிஓ என்பது ஹூண்டாய் இந்தியாவின் ரூ.27,870 கோடி ஐபிஓவை விட தாண்டும் என கூறப்படுகிறது. இதன்மூலம் முகேஷ் அம்பானி புதிய சாதனையை படைக்க உள்ளார்.
இந்நிறுவனத்தின் மதிப்பீடு என்பது 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதன்மூலம் ஆர்ஐஎல் பங்கு விஷயத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ என்பது முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்ததாக அமையலாம். இந்தியாவை பொறுத்தவரை தொலைத் தொடர்பு துறை என்பது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில் லாபகரமான நிறுவனத்தின் மீதான முதலீடு மக்களுக்கு பாதுகாப்பு அம்சத்தை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது.