திடீர் மூச்சுதிணறல்... முன்னாள் பிரதமர் தேவகவுடா மருத்துவமனையில் அனுமதி!

 
தேவகவுடா

திடீர் மூச்சுதிணறல் காரணமாக முன்னாள் பிரதமரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான தேவகவுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், தேவகவுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்திய அரசியலில் மிக முக்கியமான ஆளுமையான தேவகவுடா, தற்போது கட்சி, நிர்வாகம் ஆகியவற்றை தனது மகன் குமாரசாமியிடம் கொடுத்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறார். எனினும், அகில இந்திய அளவில் முக்கியமான பிரச்சனைகளில்  கவனம் செலுத்தி அரசியலில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறார். தேவையானபோது தன்னுடைய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

தேவகவுடா

தற்போது 91 வயதாகும் தேவேகவுடா  பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அழைத்துச் சென்று பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில்  அனுமதித்தனர்.அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு லேசான மூச்சுத்திணறல் இருப்பது தெரியவந்துள்ளது.

தேவகவுடா

இதையடுத்து அவருக்கு மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து, மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தங்கள் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் இவர் முன்பு அறிவித்திருந்தார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web