தமிழகம் முழுவதும் 1085 வேட்புமனுக்கள் ஏற்பு... நாளை தொகுதி வாரியாக இறுதிப்பட்டியல் வெளியீடு!

 
வேட்பு மனு
 

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல்  19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து நேற்று பரிசீலிக்கப்பட்டன. இதில் சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.  
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை  நடந்து முடிந்ததில்  மொத்தம் 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இதில் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 1,085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
 வேட்பு மனுத் தாக்கல்
இதில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 பேரின் வேட்பு மனுக்களும், தென்சென்னையில் 53 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக வடசென்னையில் 49 பேரின் மனுக்கள், நாமக்கல்லில் 48 பேரின் மனுக்கள், ஈரோட்டில் 47 மனுக்கள், கோவையில் 41 மனுக்கள், திருச்சியில் 38 மனுக்கள், வேலூர், திருவண்ணாமலையில் தலா 37 மனுக்கள், கிருஷ்ணகிரியில் 34 மனுக்கள், தூத்துக்குடியில் 26 மனுக்கள், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஆரணி தொகுதிகளில் தலா 32 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

மேலும் அரக்கோணம், தேனியில் தலா 29 பேரின் மனுக்கள், சேலம், விருதுநகர், கன்னியாகுமரி ராமநாதபுரத்தில் தலா 27 பேரின் மனுக்கள், திருநெல்வேலி, தென்காசியில் தலா 26 பேரின் மனுக்கள், தர்மபுரியில் 25 மனுக்கள், பெரம்பலூரில் 23 பேரின் மனுக்கள், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரையில் தலா 21 பேரின் மனுக்கள், பொள்ளாச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூரில் 19 பேரின் மனுக்கள், சிதம்பரத்தில் தலா 18 மனுக்கள், மயிலாடுதுறையில் 17 பேரின் மனுக்கள், திருப்பூர், நீலகிரியில் தலா 16 பேரின் மனுக்கள் திருவள்ளூரில் 14 மனுக்கள், காஞ்சிபுரம், தஞ்சாவூரில் தலா 13 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் என்றால் நாகப்பட்டினம் தொகுதியில் 9 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தேர்தல் வேட்புமனு தாக்கல்
 அதேபோல் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட 22 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்  8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து சட்டசபை தேர்தலுக்கு 14 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 30ம் தேதி நாளையே  கடைசி நாளாகும். அதற்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள்  திரும்ப பெற்று கொள்ளலாம் அதே நேரத்தில் தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web