15 நாட்களில் ரூ110 கோடி பறிமுதல்... சத்ய பிரதா சாகு அதிர்ச்சி தகவல்!

 
ஜனநாயகக் கடமையாற்றிய சத்ய பிரதா சாகு!

 இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் ஏப்ரல் 19முதல் ஜூன் 1ம் தேதி வரை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றைய தினத்தில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி பொதுமக்கள் ஆவணங்கள் இல்லாமல் ரூ.50000க்கும் அதிகமான ரொக்கப் பணம் எடுத்துச் செல்ல கூடாது என அறிவிக்கப்பட்டது.

பறக்கும் படை பறிமுதல்
இதனையடுத்து  தமிழகத்தில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, மார்ச் 16ம் தேதி மாலையில் இருந்து மார்ச் 31ம் தேதி  வரை தமிழகத்தில் சரியான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக சுமார் ரூ.110 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

பறக்கும் படை

இது குறித்து சத்யபிரதா சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தொகை  ரூ.48.61 கோடி, மதுபானம் ரூ.3.06 கோடி, தங்கம், வெள்ளி நகைகள் ரூ.47.53 கோடி, போதை பொருட்கள் ரூ.67 லட்சம் மற்றும் வருமான வரித்துறையினர் சுமார் ரூ.10 கோடி என மொத்தம் ரூ.109.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web