இன்று முதல் 2ம் கட்ட வேட்பு மனுத் தாக்கல்!

 
வேட்பு மனு தாக்கல்

 இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழகம் , புதுச்சேரி பகுதிகளில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

வேட்புமனுத் தாக்கல்
அதன்படி அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம்  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் என 12 மாநிலங்கள் இரண்டாம் கட்டத்தேர்தலில் இடம் பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக ஏப்ரல் 4 என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஜம்மு-காஷ்மீர் தவிர, 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 5 அன்று நடைபெறும். ஜம்மு-காஷ்மீரில் வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 6 அன்று நடைபெறும். வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 8ம் தேதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

வேட்பு மனுத் தாக்கல்


மக்களவை 2024 பொதுத் தேர்தலில் தேர்தல் நடைபெறவுள்ள 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கான அரசிதழ் அறிக்கை இன்று வெளியிடப்படும் எனத் தெரிகிறது. 88 மக்களவைத் தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ம் தேதி நடைபெறும்.
முதல் கட்டத்திற்கான அரசிதழ் அறிவிப்பில் மணிப்பூருக்கு வெளியே உள்ள பகுதிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. 2ம் கட்ட  வாக்குப்பதிவில் மற்றொரு பகுதி சேர்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  


மணிப்பூர் மக்களவையின் 15 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு தொகுதிக்கு ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெறும். மக்களவையின் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மற்றொரு தொகுதிக்கு ஏப்ரல் 26ம் தேதி 2ம் கட்டமாக  தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web