தேர்தல் அலுவலர்களுக்கு 4 கட்ட பயிற்சி.... சத்ய பிரதா சாகு சுற்றறிக்கை!

 
தேர்தல் பயிற்சி

 தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய தேர்தல் ஆணையம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், தமிழகம் முழுவதும்  மக்களவைத் தேர்தலுக்கான புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும். ஜனவரி 1, 2024ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலை புதுப்பித்து இறுதி செய்யப்படும்.  பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

தேர்தல் பயிற்சி

அதன்  நகல் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தமிழகத்தை பொறுத்தவரை  தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி முடிவடையும் நிலையில்  ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

மக்களவை தேர்தலில் பணிபுரிய உள்ள  தேர்தல் அலுவலர்களுக்கு 4 கட்ட பயிற்சி அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சத்யபிரத சாகு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி  மார்ச் 24ம் தேதி முதல் கட்ட பயிற்சியும், ஏப்ரல் 7ம் தேதி இரண்டாவது கட்ட பயிற்சியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனையடுத்து ஏப்ரல் 16ம் தேதி மூன்றாவது கட்ட பயிற்சியும், ஏப்ரல் 18ம் தேதி நான்காவது கட்ட பயிற்சியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web