தேர்தல் 2024: இந்தியா முழுவதும் 96.88 கோடி வாக்காளர்கள்!

 
தேர்தல்

இந்தியாவின்  மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் தொடங்குகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சந்து, கியானேஷ் குமார் ஆகியோர் கூட்டாக இன்று செய்திளர்களை சந்தித்தனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக  மே 13ம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4  ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 55 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 96.8 கோடி வாக்காளர்கள். 49.7 ஆண்  , 47.1 கோடி  பெண் வாக்காளர்கள், முதல்முறை வாக்காளர்கள் 1.8 கோடி வாக்காளர்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை திருவிழா போல நடத்த வேண்டும்என்பதே எங்கள் நோக்கம் என்கிறார்.  தலைமை தேர்தல் ஆணையர்.

தேர்தல்

அப்போது மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அட்டவணை அறிவிப்பை அவர்கள் வெளியிட்டனர்.  அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும்  சேர்த்து 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்  மார்ச் 27. மனுக்களை  வாபஸ் பெறுவதற்கு மார்ச் 30 ம்  தேதி கடைசி நாள். வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் தேதி அறிவிப்பை  எதிர்பார்த்து கட்சிகள் காத்திருந்தன.  கூட்டணி பேச்சு வார்த்தைகள் முடிவு பெற்றுள்ள நிலையில் திமுக சார்பில்  கூட்டணிக் கட்சிகளுகான தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு விட்டன. இந்திய யூனியன் முஸ்லிம், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்  அறிவிக்கப்பட்டு விட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற திருமாவளவனும், ரவிக்குமாரும் தான் போட்டியிடுகிறார்கள் என்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web