பலமாகிறது அதிமுக கூட்டணி... தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல்!

 
பிரேமலதா

அதிமுக கூட்டணி பலமாகிறது. தொகுதி ஒதுக்கப்படுவது குறித்த தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 4 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கடந்த இரு தினங்களாக அதிமுக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நீடித்து வந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக  அதிமுக - தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு இடையே இரண்டு கட்ட நேரடி பேச்சுவார்த்தைகளும், அதைத் தொடர்ந்து பல கட்ட ரகசியப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது. இதில் தேமுதிக 7 தொகுதிகள் வரை கேட்டுப் பிடிவாதமாக உள்ள நிலையில் அதிமுக தரப்பில் 3 தொகுதிகள் தர சம்மதம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பிரேமலதா

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், நீடிக்கும் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வர இரண்டு தரப்பினரும் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாக நேற்று இரவு இரண்டு தரப்பினருக்கும் இடையே மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 7 தொகுதிகளில் இருந்து இறங்கி வர தேமுதிகவும், மூன்று தொகுதிகளில் இருந்து ஏறி வர அதிமுகவும் இசைவு தெரிவித்தன.

பிரேமலதா

அதனையடுத்து தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகளை வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேர்தலுக்கு பின்னர் நல்ல முடிவு எடுப்போம் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளதாம். இதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிமுக, தேமுதிக தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேமுதிகவுடன் உடன்பாடு ஏற்பட உள்ள நிலையில் பாமகவை தங்கள் கூட்டணிக்கு கொண்டுவரஅதிமுக இன்னமும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் பாமகவோ பாஜக பக்கம் செல்ல அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிக விருப்பமாக உள்ளதால் அது குறித்த முடிவு எட்டப்படாமல் உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web