தமிழகம் வருகிறார் அமித்ஷா... சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்!

 
அமித்ஷா
தேர்தல் பிரச்சாரங்கள் களைக்கட்ட துவங்கியிருக்கும் நிலையில், தமிழகம் வருகிறார் அமித்ஷா. சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு, பொதுக்கூட்டங்களில் பேசவும் ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. வேட்புமனு தாக்கல் திருவிழாக்கள் நிறைவடைந்த நிலையில், பல இடங்களில் பலத்த சர்ச்சைகளுக்குப் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அமித்ஷா தமிழகம் வருகிறார். மதுரை, சிவகங்கை மற்றும் சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். தேர்தல் வாக்குப்பதிவு தினத்திற்குள்ளாக மீண்டும் இன்னொரு முறை மோடி தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமித்ஷா

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் முதல் வாரத்தில் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 4ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web