அமித்ஷா ரோடு ஷோ... 1500 போலீசார் குவிப்பு... கண்காணிப்பு வளையத்துக்குள் மதுரை!

 
அமித்ஷா

இந்தியாவின் 18ஆம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 12) மதுரையில் தோ்தல் பேரணியை நடத்த உள்ளார். இந்த பேரணியின் போது 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

 

அமித் ஷா

 

மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ராம. சீனிவாசன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிரசாரம் செய்ய மதுரை வரவுள்ளார். இதையொட்டி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பேரணியில் கலந்து கொள்ளும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா

மாநகர போலீஸ் கமிஷனர் ஜெ.லோகநாதன், துணை கமிஷனர், மற்றும் இதற அதிகாரிகள் உள்பட 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமித்ஷா வருகையையொட்டி மதுரை மாநகர காவல்துறை சார்பில் வியாழக்கிழமை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி நேதாஜி சாலை முழுவதும் காவல்துறையிம்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  நேதாஜி சாலையில் வாகனங்கள் செல்லவும், நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும்அவதிப்பட்டு வருகின்றனர். நேதாஜி சாலை முதல் தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்தூண் வரை அமித்ஷா ரோடு ஷோ நடைபெற உள்ளது. அத்துடன்  ரோடு ஷோ நடைபெறும் பகுதியில் வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை. பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 3 மணி முதல் வணிக நிறுவனங்கள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web