அமித்ஷா தமிழகம் வருகை திடீர் ரத்து... தொண்டர்கள் அதிர்ச்சி!

 
அமித்ஷா

 தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வருகின்றன.  பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி ஏற்கனவே 5 முறை பிரச்சாரம் செய்துள்ளார். மீண்டும் 6 வது முறையாக தமிழகம் வர உள்ளார்.  

அமித்ஷா

இந்நிலையில் மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை பிரச்சாரத்திற்காக தென்காசிக்கு வருவதாகக் கூறப்பட்டது. அமித்ஷா  சிவகங்கை தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பிற்பகலில்  ஹெலிகாப்டரில் தென்காசி வருவார். இளஞ்சியில் ராமசாமி பிள்ளை பள்ளி வளாகத்திலிருந்து  தென்காசி மத்தளம் பாறை விலக்கு பகுதி ஆன ஆசாத் நகர் பகுதியில் ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. அமித்ஷா வருகை ஒட்டி தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. 

அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில்  மேற்கொள்ள இருந்த பிரச்சார நிகழ்வுகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இன்று இரவு மதுரைக்கு வருவதாக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தென் மாவட்டங்களான  சிவகங்கை ,தென்காசி ,குமரி தொகுதிகளில் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க அமித்ஷா திட்டமிட்டு இருந்தார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web