அமித்ஷா ரோடுஷோ ரத்து... தொண்டர்கள் அதிர்ச்சி!

 
அமித்ஷா

 தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. தேசிய கட்சிகள் தமிழகத்தில் முகாமிட்டு வருகின்றன. அந்த வகையில் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை தமிழ்நாடு வருகை தர உள்ளார்.  இந்நிலையில் காரைக்குடியில் அவர் பங்கேற்க இருந்த வாகன பேரணி   ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமித்ஷா

பாஜகவின் ரோடு ஷோவுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லை என கூறப்படும் நிலையிலும், சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் 525 கோடி நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளதாலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமித்ஷா
இருப்பினும் மதுரையில் நாளை நடைபெறும் வாகனப் பேரணியில் திட்டமிட்டபடி அமித்ஷா பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை இரவு 7.30 மணி அளவில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார். காரைக்குடி வாகனப் பேரணி ரத்து செய்யப்பட்ட நிலையில் திருமயத்தில் உள்ள சிவன் கோயிலில் தரிசனம் செய்வதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web