இதப் பார்றா... மாவட்ட செயலருக்கு 6 பவுன் தங்கம்... அன்பில் மகேஷ் அட்ராசிட்டி!

 
அமைச்சர் அன்பில் மகேஷ்

 தமிழகத்தில் நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அத்துடன் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். இதனால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர். ஒரே திட்டத்திற்கு அடித்துக் கொள்ளும் கூத்துக்களும் அரங்கேறி வருகின்றன.

தேர்தல்

அந்த வகையில் தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  “தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில்   திமுக வேட்பாளர் முரசொலி போட்டியிடுகிறார். இவர் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் களப்பணி ஆற்ற முன்வர வேண்டும்.

வேட்பு மனு தாக்கல்


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசு மகளிருக்கு வழங்கும் உரிமைத் தொகையை மத்திய அரசு வழங்கி வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் நிறுத்திவிடலாம் எனவும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுத் தரும் திமுக மாவட்டச் செயலாளருக்கு, எனது சொந்த செலவில் 6 பவுன் தங்கச் சங்கிலி பரிசாக வழங்குவேன்” எனக் கூறியுள்ளார்.  இந்த கூட்டத்தில் தஞ்சாவூர் எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், அண்ணாதுரை, அசோக்குமார், டிகேஜி.நீலமேகம், முன்னாள் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web