வைரல் வீடியோ... பாஜக வேட்பாளரை விரட்டி விரட்டி அடித்து , கார் கண்ணாடியை ஊரை விட்டு துரத்திய பொதுமக்கள்!

 
அசோக் தன்வார்

 இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதனையடுத்து தேர்தல் கட்சிகள் தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. 3 வதுமுறையாக பாஜக ஆட்சியை பிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்க்கொண்டு வருகிறது . இந்த முறை ஆட்சிக் கட்டிலில் அமர காங்கிரஸ் அனைத்து வியூகங்களையும் வகுத்துள்ளது. அந்த வகையில் அரியானா மாநிலம் சிர்சா தொகுதியின் பா.ஜக வேட்பாளர் அசோக்தன்வார்.


இவர் பிரச்சாரத்திற்கு சென்ற போது இவரை பொதுமக்கள் விரட்டியடித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரல் ஆகிவருகிறது.  அரியானா மாநிலம் சிர்சா மக்களவை தொகுதியில் பா.ஜ சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் அசோக் தன்வார். மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்த அவர் 2009ம் ஆண்டு சிர்சா தொகுதியில் வெற்றி பெற்றார். 2014ல் அதே தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இருப்பினும் 2014 முதல் 2019 வரை அரியானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார்.
அவரை மாற்றி செல்ஜா குமாரியை மாநில தலைவராக கட்சி மேலிடம் நியமித்ததால் காங்கிரசில் இருந்து விலகி  அசோக் தன்வார் 2024 ஜனவரி 20ம் தேதி பா.ஜகவில் இணைந்தார்.

அசோக் தன்வார்

இதன் மூலம் சிர்சா தொகுதி பா.ஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.  தேர்தல் பிரச்சாரத்திற்கு பல வாகனங்களில் செல்லும் போது ஆயுதங்களுடன் குவிந்த பொதுமக்கள் அசோக்தன்வார் காரை குறிவைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.  இதில் அவரது கார் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. இதையடுத்து அவரது காரும், அவரது காருடன் சென்ற மற்ற கார்களும் வேகமாக அங்கிருந்து சென்றன. இது குறித்து  அசோக் தன்வார் கூறுகையில் இந்த வீடியோ 3 ஆண்டுகள் பழையது. இதுபற்றி தேர்தல் ஆணைத்தில் புகார் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web