வீடுகள் தோறும் கருப்புக்கொடி, பதாகைகள்... தேர்தலை எதிர்த்து தொடர் போராட்டத்தில் கிராம மக்கள்!

 
கருப்புக்கொடி கிராமம்

 தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஒரு கிராமமே திரண்டு வந்து தேர்தலை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. திருவண்ணாமலை செங்குணம் கொள்ளை மேடு கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இந்தியா  சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் 5 கிமீ நடந்து சென்று தான் வாக்களிக்க வேண்டிய சூழல்.  

கருப்புக்கொடி கிராமம்


 முதியோர், கர்ப்பிணிகள், இணைநோய் இருப்பவர்கள் இத்தனை தூரம் நடந்து சென்று வாக்களிக்க சிரமமாக உள்ளது என கலெக்டரிடம் பல ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர். இது குறித்து கிராமமே திரண்டு சென்று பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்  அலுவலர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்கள் கிராமத்திற்கு இம்முறை வாக்குச்சாவடி மையம் அமைக்காவிட்டால் தங்கள் ஒட்டுமொத்த கிராமமும் வாக்களிக்கப்போவதில்லை என கூறி வருகின்றனர். அத்துடன்  எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி சுமார் 4 நாட்ககளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்


கிராமம் முழுவதும்  “தமிழக அரசே நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல,” உட்பட   பல்வேறு வாசகப் பதாகைகளை எழுதிவைத்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இச்சம்பவம் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  எங்கள் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என  கிராம மக்கள் கூறி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web