பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது... தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு!

 
பூத் சிலிப்

 இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல்  7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை  இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் மொத்தமாக  6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

பூத் சிலிப்

அத்துடன் இன்று ஏப்ரல் 4ம் தேதி முதல்  முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு பணியும் தொடங்கப்பட்டுள்ளது.  தேர்தலில் வாக்குப்பதிவு குறித்து தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி “ பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது  வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உட்பட  12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்

பூத் சிலிப்

இந்த தேர்தலில்  வாக்காளர் வசதிக்காக வாக்காளர்களின் புகைப்படமும் பூத் சிலிப்பில் சேர்க்கப்பட்டு உள்ளது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், வாக்காளர் அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய அளவில் எழுத்து பிழை இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.  வாக்காளர் அட்டையில் புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் " எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web