அடுத்த அதிரடி.. மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனை!

 
மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை

நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டியிருக்கும் நேரத்தில் வருமான வரித்துறையினர், அமலாக்கதுறையினர் தங்களது சோதனைகளையும் அதிகரித்துள்ளனர். லோக்பால் உத்தரவின் பேரில் நேற்று கொல்கத்தாவில், மொய்த்ரா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்த அடுத்த நாளே சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி., மஹுவா மொய்த்ராவின் இரண்டு வீடுகளில் நேற்று திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் மொய்த்ரா இரண்டாவது முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை

 லோக்பால் உத்தரவின் பேரில் மொய்த்ரா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்த அடுத்த நாளே இந்த திடீர் சோதனையில் சிபிஐ இறங்கியுள்ளது. அவரை விசாரணைக்கு அழைக்கவும் திட்டமிட்டுள்ளது. தெற்கு கொல்கத்தாவின் அலிப்பூரில் உள்ள அவரது பெற்றோர்கள் திபேந்திரலால் மற்றும் மஞ்சு மொய்த்ரா ஆகியோருக்கு சொந்தமான இல்லத்தில் நேற்று காலை 7 மணியளவில் சிபிஐ குழு சென்றனர். அப்போது மொய்த்ராவின் பெற்றோர் அங்கு இல்லை.

சிபிஐ அதிகாரிகள் சோதனைக்கு வந்திருப்பது குறித்து காவலாளர்கள் மொய்த்ராவின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்ததும், மொய்த்ராவின் அம்மா வந்தார். சிபிஐ குழுவினர் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அந்த குடியிருப்பில் சோதனை நடத்தி, மதியம் 1.30 மணியளவில் வெறுங்கையுடன் வெளியேறினார்.

மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை

மற்றொரு சிபிஐ குழு பிற்பகலில் கிருஷ்ணாநகரில் உள்ள சித்தேஸ்வரிதாலாவில் உள்ள மொய்த்ராவின் கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தியது. அவர்களுடன் மத்திய படை வீரர்களும் சென்றனர். இந்த அலுவலகத்தை மொய்த்ரா தனது 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web