வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் மாற்றம்... தேர்தல் ஆணையம் அதிரடி!

 
கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

இந்தியாவில்   ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி மக்கள் வாக்களிக்க   உள்ளனர்.  அந்த வகையில் இன்று தமிழகம், புதுவை உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல்  தொடங்கியுள்ளது.  
 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்  மார்ச் 27ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்

மேலும் மார்ச் 28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிப்பு    வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 30- தேதி கடைசி நாள்  இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக  ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இடங்களில் வாக்குப்பதிவுக்கான நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி   ஏப்ரல் 19 தமிழ்நாடு புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.  மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகலாந்து  மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்


 சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளில் மட்டும்   மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் என  தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகள்,  நக்சலைட்டுகள் நடமாடும் பகுதிகளில்   வாக்குப்பதிவு நேரமானது மாற்றப்பட்டு இருப்பது  குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web