கவனமா களப்பணியாற்றுங்க... மாவட்ட செயலர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை!
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக இரண்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அத்துடன் திமுக தேர்தல் அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இன்று திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதல்வர் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து அழைத்து சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் . எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் பொறுப்பானவர் தலைமைக்கு திருப்பி பதில் சொல்ல வேண்டும் என்ற கவனத்துடன் பணியாற்றுங்கள்.
கூடுதல் வாக்கு பெறும் பொறுப்பு மாவட்ட பொறுப்பு அமைச்சர்களையும் , மாவட்டச் செயலாளர்களையும் சாரும். எந்த தொகுதியில் வாக்கு குறைந்தாலும் அந்தத் தொகுதி மாவட்ட செயலாளரும் பொறுப்பு அமைச்சருமே பொறுப்பு. வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து அழைத்து சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.
திமுக கூட்டணிக்கட்சியினர் ஒற்றுமையாக தோளோடு தோளாக நீண்டகாலமாக கொள்கை உணர்வுடன் பயணித்து வருகின்றனர். தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலனும் தமிழகத்தின் நலனும் தான் முக்கியம். அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். இந்தியா கூட்டணி பெறப்போகும் வெற்றி சமூகநீதிக்கும் மதச்சார்பின்மை குறித்த கருத்துக்களை கொண்டு வரலாம் என்ற எண்ணம் பாஜகவுக்கு இனி கனவிலும் வரக்கூடாது; தமிழகம் , புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம் ; ஜூன் 4-ம் தேதி வெற்றிச் செய்தியோட வந்து என்னைச் சந்தியுங்கள் என பேசியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!